ராஜமவுலிக்காக வலிமையை உதறித்தள்ளும் உதயநிதி! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் வரும் 2022 ஆண்டின் ஆரம்பத்திலேயே வெளியாகவுள்ள படங்கள் என்றால் குறைவு தான். அதில் முக்கிய படமாக இருப்பது நடிகர் அஜித்தின் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் இப்படம் பொங்கல் டிரீட்டாக அமையவிருக்கிறது.
அதேபோல் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் எஸ்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஆர் ஆர் ஆர் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் உதயநிதி பேசியபோது, மாவீரன் படத்தின் போது சென்னை சத்யம் திரையரங்கு ராஜமவுலிக்கு பிடித்தமான தியேட்டர் என்பதால் அங்கு வெளியிட என்னிடம் கேட்டார். அதை செய்து வைத்தேன்.
தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தினை சத்யம் திரையிரங்கில் 6 ஸ்கிரீனில் 5 ஸ்கிரீனில் திரையிடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு தயாரிப்பு நிறுவனம் இப்படி செய்தால் எப்படி மற்ற தமிழ் படங்கள் உங்களை நோக்கி வருவார்கள் என்று திட்டி வருகிறார்கள்.
உங்க டான்ஸ் பாத்ததுக்கே எனக்கு கழுத்து சுளுக்கிடுச்சு - 'நாட்டு நாட்டு' பாடல் டான்ஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கலகல!#SunNews | #UdhayanithiStalin | #RamCharan | #NTR | #RRR pic.twitter.com/9uzNPyDMmd
— Sun News (@sunnewstamil) December 28, 2021