சோனமுத்தா போச்சா!! TTF வாசனுக்கு 10 ஆண்டுக்கு ஆப்பு வைத்த ஆர்டிஓ..
யூடியூப் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் டிடிஎப் வாசன். விலையுயர்ந்த பைக்குகளை ஓட்டுவதோடு வெகுவேகமாக சென்று விபத்தையும் போக்குவரத்து விதியையும் மீறி நடந்து வருகிறார்.
அப்படி கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. விலையுயர்ந்த பாதுகாப்பு கவசங்கள் போட்டதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், தவறான வழிநடத்தும் செயல் என்று கூறி கைது செய்யப்பட்டார் டிடிஎஃப் வாசன். வாசனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து வந்த நீதிமன்றம் பைக்கை எரிக்கவும் செய்யவேண்டும் என்று காட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில் வாசனின் லைசன்ஸை ரத்து செய்ததோடு 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருக்கிறது காஞ்சிபுரம் ஆர்டிஓ.
2033 அக்டோபர் 5 வரை டிடிஎஃப் வாசனால் இனிமேல் பைக்கை ஓட்டமுடியாது. இதனை வைத்து வாசனை பலர் கிண்டல் செய்து மீம்ஸ் வீடியோக்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

