நயன்தாராவை விட இரண்டு மடங்கு சம்பளம்! பிரபல நடிகைக்காக பல கோடிகளை வாரிக்கொடுத்த லெஜண்ட் சரவணா

Nayanthara The Legend Urvashi Rautela
By Edward Jul 31, 2022 06:16 AM GMT
Report

ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை விற்று பிரபலமான கடை என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான். உலகளவில் பல பிராண்ட்களை உருவாக்கி சம்பாதித்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சில விளம்பரங்களையும் நடிகையை வைத்து செய்து வந்தனர்.

அப்படி அந்நிறுவனத்தின் நிறுவனர் சரவணா அருள் நடிகைகளுடன் சேர்ந்து விளம்பரத்தில் நடித்தும் வந்தார். இதனை தொடர்ந்து படத்தில் நடிக்கலாம் என்று ஜேடி ஜெர்ரி இயக்குனர்களை வைத்து தி லெஜண்ட் படத்தில் நடித்தார். சில நாட்களுக்கு முன் இப்படம் தியேட்டரில் வெளியாகியது.

2000த்திற்கு மேற்பட்ட தியேட்டரில் உலகளவில் வெளியானது. மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், நாசர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் கதாநாயகிகளாக கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிகளில் ராய் லட்சுமியும் நடித்திருக்கிறார்.பெங்காலி, இந்தி படங்களில் நடித்து வரும் ஊர்வசிக்கு நயன் தாராவை விட இரு மடங்கு சம்பளத்தை பெற்றுள்ளார்.

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக திகழும் நயன் தாராவுக்கே ஒரு படத்திற்காக 10 கோடி வரை தான் சம்பளமாக கேட்கிறார். ஆனால் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு லெஜண்ட் படத்திற்காக சுமார் 20 கோடி அளவில் சம்பளத்தை வாரிக்கொடுத்துள்ளார் சரவணா அருள். இதேபோல் 10 நடிகைகளுக்கு சம்பளம் கொடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் அழைத்திருக்கிறார் சரவணா அருள்.

ஏற்கனவே நயன் தாராவிடம் ஒரு விளம்பரத்திற்கும் லெஜண்ட் படத்தில் நடிக்கவும் சரவணா அருள் கூப்பிட்டு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் என்ற செய்தியும் சில ஆண்டுகளுக்கு முன் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.