கைவிட்ட மகன் விஜய், சீரியலில் தஞ்சமடைந்த தந்தை எஸ்.ஏ.சி.. இப்படியொரு நிலைமையா
Vijay
S. A. Chandrasekhar
By Kathick
விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை என்பதினால், தனது தாய், தந்தையை விட்டு மனைவி பிள்ளைகளுடன் விஜய் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா என கிசுகிசுக்கப்பட்டாலும், அவை யாவும் எந்த அளவிற்கு உண்மையான ஒன்று என தெரியவில்லை.
மகன் தன்னை கைவிட்டாலும் தொடர்ந்து சினிமாவில் படங்களை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சி. ஆம், சமீபத்தில் கூட இவர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை திரைப்படம் திரைக்கு வந்தது.
இந்நிலையில், அடுத்ததாக சீரியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம் எஸ்.ஏ.சி. ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் எஸ்.ஏ.சி நடிக்கவுள்ளார். ராதிகாவின் ரடான் தயாரிப்பு நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.