என் அப்பா சொத்தை அழித்தேனா? மறைந்த எஸ்பிபி மகன் சரண் வேதனை..
தமிழ் சினிமாவில் லிஜெண்ட்டரி பாடகர் என்று கூறும் அளவிற்கு இந்திய சினிமாவில் வாழ்ந்தவர் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம். சுமார் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி சாதனை படத்தவர். சமீபத்தில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டு பின் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்நிலையில் தன் தந்தையின் சொத்தை அழித்துவிட்டேன் என்று செய்திகள் பரவி வருகிறதற்கு விளக்கமளித்துள்ளார் எஸ். பி. சரண். என் பெற்றோர்களின் சம்மதத்துடன் பாடகனாக இருந்த நான் சில படங்களை தயாரித்தேன். இயக்குநர் சமுத்திரகனி கூறிய கதை பிடித்ததால் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தினை தயாரித்தேன்.
படம் வசூல் ரீதியாக ஏமாற்றத்தை தந்தாலும் தேசிய விருது கிடைத்தது. பின் தெலுங்கு படமான வர்ஷம் படத்தினை தமிழில் மழை என்ற டைட்டில் படத்தினை தயாரித்தேன். முதல் படத்தின் நஷ்டத்தை விட மொத்த பணமும் போய்விட்டது. அதற்கு அப்பா சாதகமாக ஆறுதலாகவும் எல்லாத்துறையிலும் நஷ்டம் ஏற்படும் என்றும் வருத்தப்பட்ட கூடாது என்று ஆறுதலாக பேசினார்.
பின் என் நண்பர் வெங்கட்பிரபுவின் படமான சென்னை 28 யை தயாரித்து வெற்றி பெற்றேன். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் வரவில்லை. இதையடுத்து ஆரண்ய காண்டம் படத்தை தயாரித்து அதிலும் லாபம் பார்க்கவில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு கஷ்டத்தில் இருந்தேன். தந்தைக்குச் சொந்தமான கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் பணிகள் ஏதும் நடக்காதது வேதனை அளித்ததாகவும் அந்த சமயம் குடும்ப சொத்தினை நான் அழித்துவிட்டேன் என்றும் கூறப்பட்டது.
எஸ்பிபியின் சம்பாதித்த இத்தனை ஆண்டுகால சொத்தை சொந்த மகனே அழித்ததாகவும், இனிமேல் எஸ்பிபி அவ்வளவு தான் என்றும் பெற்ற மகனே கலை வாழ்க்கை துவங்கினானோ அதே இடத்தில் அவரை கொண்டு வந்துவிட்டானே என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதனாலும் மன வேதனைபட்டு இருந்தேன். ஆனால் பெற்றோர்கள் இருவரும் என்பக்கம் இருந்து ஆதரவாக இருந்தனர்.
இதையடுத்து பின்னணி பாடலிலும், கச்சேரிகளில் பாடிய வருமானம் தான் குடும்ப பொருளாதாரத்திற்கு ஈடுகொடுத்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அதில் முழு கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார். நான் என் குடும்ப சொத்தை அழிக்கவில்லை என்று கூறியுள்ளார்.