விஜய் அப்பாவுக்கு சர்ஜரி செய்யும் அளவுக்கு என்னதான் ஆச்சி!!SAC வெளியிட்ட வீடியோ..
நடிகர் விஜய் அப்பாவாக தற்போது சீரியலில் நடித்து வரும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில விசயங்களை பகிர்ந்து வருவார். அப்படி சமீபத்தில் ஒரு வீடியோவில் தன் உடல்நிலை குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதில், நான் எப்போது என்ர்ஜியான பர்சன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இரண்டு மூன்று மாதமாக தனக்கு ஒருமாதிரியாகவே இருப்பதாகவும் எனர்ஜி குறைந்து ஒரு ஃபீல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதனால் மருத்துவரை உடனே பார்த்து ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி அதை எடுத்துப்பார்த்தேன். ஸ்கேனை பார்த்த மருத்துவர் ஒரு பிரச்சனை இருக்கு, உடனே சர்ஜரி செய்யனும் என்று கூறினார்.
நானும் சர்ஜரி முடித்து இன்று டிஸ்சார்ஜ் ஆவிவிட்டேன். எல்லோருக்கும் நல்லது கெட்டது நடக்கும். பிரச்சனை வந்துவிட்டதே என்று நினைக்காமல் அதை ஏற்றுக்கொண்டால் மனம் பாசிட்டிவ் ஆக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த விசயத்தை கேட்டு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.