மகன் படத்தையே கிழித்து தொங்கவிட்ட சந்திரசேகர்

vijay beast sac
By Tony Apr 18, 2022 07:35 AM GMT
Report

விஜய் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் தந்தை தான். துப்பாக்கி வரை விஜய்க்கு என்று பார்த்து பார்த்து கதையை தேர்ந்தெடுத்தவர்.

சமீப காலமாக விஜய்க்கும் இவருக்கும் சில பனிப்போர் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் விஜய்யுடன் இருக்கும் ஒரு அரசியல் பிரமுகர் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த பீஸ்ட் படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இதுக்குறித்து அவருடைய தந்தை சந்திரசேகர் பேசுகையில் ‘படத்தில் எல்லோரும் இருக்கிறார்கள், ஆனால், திரைக்கதை தான் இல்லை, விஜய்யை நம்பி மட்டுமே எடுத்த படம் போல் தெரிகிறது.

இளம் இயக்குனர்களுக்கு பெரிய நடிகர்கள் கிடைத்தவுடன், மிக மோசமாக எடுக்கின்றனர்’ என்று கடுமையாக கூறியுள்ளார்.