காசு வாங்காமல் விஜய்க்கு உதவிய விஜயகாந்த்!! மனைவி கேட்டதால் சொத்தை கொடுத்த தளபதி தந்தை...

Vijay Vijayakanth S. A. Chandrasekhar
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். அவர் நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடலில் சில பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று நடக்கக்கூட முடியாத அளவிற்கு மாறிவிட்டார்.

காசு வாங்காமல் விஜய்க்கு உதவிய விஜயகாந்த்!! மனைவி கேட்டதால் சொத்தை கொடுத்த தளபதி தந்தை... | Sac Open Vijayakanth Reject Salary Vijay Movie

நடிகர் விஜய்யின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் அறிமுகமாகி நடித்து வந்தார். தந்தையின் படங்களால் உருவான விஜய் படங்கள் சில தோல்வியாக எஸ் ஏ சிக்கு கடன் பிரச்சனையை கொடுத்தது.

அதன்பின் விஜயகாந்திடம் விஜய்க்காக நடிக்க தரக்கேட்டு படத்தையும் எடுத்து நல்ல வெற்றியை கொடுத்தார் எஸ் ஏ சி. அது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எஸ் ஏ சி அவர்கள், விஜயகாந்தை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது, விஜய்யின் இரண்டாம் படத்தில் நடிக்க உதவ வேண்டும் என கேட்டேன்.

அதற்கு உடனே பண்ணலாம் என்றும் எப்போது நடிக்கனும்-ன்னு கேட்டுக்கொண்டார். அதன்பின் ஸ்க்ரிப் எழுதி ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் எடுத்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன். அப்போது பணம் வேண்டாம் என்று வாங்க மறுத்துவிட்டார். படமும் வெளியாகியது.

காசு வாங்காமல் விஜய்க்கு உதவிய விஜயகாந்த்!! மனைவி கேட்டதால் சொத்தை கொடுத்த தளபதி தந்தை... | Sac Open Vijayakanth Reject Salary Vijay Movie

விஜயகாந்த் அவர்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கும் நிலத்தை வாங்கி வைத்திருந்தேன். அதை பிரேமலதா என்னிடம் அந்த நிலத்தை கேட்டார். நான் விஜயகாந்த் வீட்டில் ஒரு இடம் இருக்க வேண்டும் என்று நினைத்து அதை வைத்திருக்கிறேன் என்று தர மறுத்தேன்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றப்பின் அந்த நிலத்தை அவருக்கு தெரியாமல் விஜய்காந்த் மனைவி பிரேமலதாவிடம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்தேன். அதையும் கொடுத்ததை விஜயகாந்த் கோபத்தில் என்னை கேவலப்படுத்திட்டீங்க என்று கத்தினார். நான் சம்பாதித்தேன், நீங்க பெருந்தன்மையோடு இருந்ததுக்கு நான் செஞ்சிட்டேன் என்று கூறினேன் என்று எஸ் ஏ சி உருக்கமாக கூறினார்.