ஆணவத்தில் விஜய்யை வெறுத்து ஒதுக்கிய பிரபல இயக்குனர்!! விஜய்யை காப்பாற்றி தூக்கிவிட்ட எஸ் ஏ சந்திரசேகர்..
80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். தன் மகன் விஜய்யை ஆரம்பகாலத்தில் இருந்து சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர போராடினார். அப்படி நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, விஷ்னு, ரசிகன் போன்ற படங்களில் நடிக்க வைத்து பிரபலப்படுத்தினார்.
விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி இந்த உச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். ஆனால் தன்னை வளர்த்து இந்த இடத்திற்கு கொண்டு வந்த விஜய், தந்தை ஒதுக்கி வரும் விசயம் மிகப்பெரியளவில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதையெல்லாம் காதில் வாங்காத எஸ் ஏ சி, சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் விழாவில் மேடையில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார். விஜய்யை பெரிய இயக்குனர்கள் படத்தில் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டேன். நம்மை விட யாராவது அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பாரதிராஜா அலுவலகத்திற்கு சென்றேன்.
அப்போது பெரிய இயக்குனராக இருந்த சமயத்தில், என்னிடம் ஏன்யா கொண்டு வர, நீயே பெரிய இயக்குனர் நீயே பண்ணுன்னு சொல்லிட்டாரு பாரதிராஜா. நான் பண்ண மாட்டேன்ன்னு மறைமுகமாக அப்போது சொன்னார் பாரதிராஜா.
அதன்பின் கெளதம் வாசுதேவ் மேனனிடமும் விஜய்க்காக வாய்ப்பு கேட்டேன். ஆரம்பத்தில் விஜய்யை ஒதுக்கினார்கள் பல இயக்குனர்கள். அப்படி கமர்ஷியல் நடிகராக நானே விஜய்யை மாற்றினேன் என்று எஸ் ஏ சந்திரசேகர் பகிர்ந்துள்ளார்.