உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த்!! தற்போதைய நிலை..

Vijay Vijayakanth Vijayakanth S. A. Chandrasekhar
By Edward Jan 31, 2023 06:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்த நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்ற பெயரோடு தமிழ் ரசிகர்களை கவர்ந்து வந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியின் தலைவராக திகழ்ந்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சியாக இருந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வந்தார். எழுந்து நடிக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் அவர்களை பலர் சந்திக்க முடியவில்லை என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில் தன் மகன் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தினை பெற மிகமுக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் அவர்களை எஸ் ஏ சந்திரசேகர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படமும் கையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் எஸ் ஏ சி. இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் உருக்கமாக குணமடைய வாழ்த்து கூறி வருகிறார்கள்.