மனைவி அஞ்சலிக்கு முன் இந்த நடிகையை காதலித்தாரா சச்சின் டெண்டுல்கர்!! நடிகை சொன்ன உண்மை...
சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டையும், பாலிவுட்டையும் பிரிக்க முடியாத பந்தம் இப்போது வரை இருந்து வருகிறது. சிலருக்கு அது நட்பாகவும் சிலருக்கு அது காதலாகவும், அதையும் தாண்டி சிலருக்கு திருமணமாகவும் மாறியிருக்கும். அப்படி பல கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்தும் காதலித்தும் இருக்கிறார்கள்.
அந்தவகையில் கிரிக்கெட்டின் கடவுளாகவும் கிரிக்கெட் ஜாம்பவனாகவும் திகழ்ந்து, பல சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர், மனைவி அஞ்சலியை காதலிப்பதற்கு முன் ஒரு நடிகையை காதலித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஷில்பா ஹிரோத்கர்
சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் மனைவியின் சகோதரியுமான மாடல் நடிகையுமான ஷில்பா ஹிரோத்கர் தான் சச்சின் டெண்டுல்கர் காதலித்திருக்கிறாராம். இருவரும் மராத்தி மொழியினர் என்பதாலும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றாக சந்தித்து பேசியதை வைத்து இருவரும் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.
இதனால் அஞ்சலிக்கு முன்பே கிரிக்கெட்டர் சச்சின் நடிகையை காதலித்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் ஷில்பா அளித்த பேட்டியொன்றில் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
உண்மை
அதில், சச்சினை 1991ல் ஹம் என்ற படத்தின் ஷூட்டிங்கில் தான் முதலில் சந்தித்தேன். அவர் என் உறவினர் வசிக்கும் அதே பகுதியில் வசித்தார். என் உறவினர் பையன் அவருடன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவார், அப்போது சச்சினை பார்த்தேன். அப்போது சச்சினை சந்தித்தபோது அஞ்சலியை காதலித்து வந்தார்.
அந்நேரத்தில் இந்த தகவல் யாருக்கும் தெரியாது. நான் ஒரு நடிகை, சச்சின் ஒரு நட்சத்திர கிரிக்கெட்டர். எனவே நாங்கள் இருவரும் ஒன்றாக சந்தித்ததும் ஊடகங்கள் காதல் என்று கதையை உருவாக்க தொடங்கினர். அப்படி எதுவும் இல்லை.
சச்சின் அப்போதே தன் வருங்கால மனைவி அஞ்சலியை காதலித்துக்கொண்டிருந்தார் என்று நடிகை ஷில்பா ஷிரோத்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பரவிய வதந்திக்கும் ஷில்பா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.