ஓட்டல் பிசினஸ்க்கு ஆப்பு வைத்த உரிமையாளர்!! கதறி அழும் நடிகை சதாவின் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை சதா. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
தற்போது வாய்ப்பில்லாமல் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதாவின் கேரியர் உடைய காரணம் வடிவேலுவுட்ன எலி படத்தில் ஜோடியாக நடித்தது தான். அப்படி சினிமாவை தாண்டி சதா ஓட்டல் பிசினஸ் செய்து வந்துள்ளார்.
அந்தவகையில் சினிமாவில் சம்பாதித்த காசுகளை வைத்து மும்பையில் எர்த்லிங்ஸ் கஃபே என்ற ஓட்டலை நடத்தி வந்துள்ளார். ஷூட்டிங் தவிர மற்ற நேரங்களில் அந்த இடத்திற்கு சென்றுதான் நேரத்தை செலவிடுவார்.
வெற்றிக்கரமாக சென்று கொண்டிருந்த அந்த ஓட்டல் பிசினஸ் தற்போது முடுவுக்கு வந்துள்ளதாக கதறி அழுது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஓட்டல் இருக்கும் இடத்தின் உரிமையாளர் திடீரென காலி செய்ய வேண்டும் என்று கூறி பிரச்சனை செய்துள்ளார். எவ்வளவு முயற்சித்தும் கடையை மீட்கமுடியவில்லை என கூறி மனம் நொந்து கூறியிருக்கிறார் நடிகை சதா.