டிராவிட், கங்குலியால் மிரட்டப்பட்ட சீனியர் வீரர்! இவருக்கு இந்த நிலையா?

ganguly BCCI dravid indiancricket saha
By Edward Feb 22, 2022 04:04 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் ஈகோ அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்து வருவதாக பலர் கூறி வருகிறார். சமீபத்தில் விராட் கேப்டன் பதவியில் இருந்து எடுத்தது உள்ளிட்ட பல பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான விருத்திமான் சாஹா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

எந்த புகாரின் பேரில் இந்திய அணியிலிருந்து என்னை தூக்கி எரிய காரணம் தெரியவில்லை. வேண்டுமென்றே என்னை அணியில் புறக்கணிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஓய்வு எடுக்குமாறு வற்புறுத்தியதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சாஹா. இனி உங்களை அணியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். நீங்களாகவே உங்கள் ஓய்வு முடிவை அறிவித்து விடுங்கள் என கூறியதாகவும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும் தன்னை அணியில் இனிமேல் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார் சாஹா.