என் உடையை அப்படியெல்லாம் பார்த்தார்கள், அதனால் தான் இந்த முடிவு- சாய் பல்லவி
Sai Pallavi
By Tony
சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு இவருடைய படங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சமீபத்தில் வந்த இவரின் கார்கி படம் நல்ல வரவேற்பு மட்டுமின்றி இவருக்கு பல விருதுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ப்ரேமம் நடித்திருந்த போது, என் டான்ஸ் வீடியோ ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிலர் Pause செய்து அதை Zoom வைத்து ஒரு மாதிரி பேசினார்கள்.
அது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதனால் தன் உடையில் கவனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.