9 மணிக்கு மேல் தூங்கும்போது எனக்கு அந்த பழக்கம் இருக்கு!! சாய் பல்லவி ஓபன் டாக்..
சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியான நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் மாபெரும் வெற்றியடைந்தது.
அதை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் தண்டேல் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது, சாய் பல்லவி நடிப்பில் பிரம்மண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா.
மற்ற ஹீரோயின்கள் போன்று இல்லாமல் சாய் பல்லவி தொடர்ந்து ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு மருத்துவராக இருந்தும் சாய் பல்லவியின் தினசரி வாழ்க்கையில் சில வித்தியாசம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு இந்த பழக்கம் இருக்கு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் படிப்பு, வேலை என ஓட ஆரம்பித்தபோது எனக்கு இந்த பழக்கம் தொடங்கியது. நான் ஜார்ஜியாவில் படித்துக் கொண்டிருக்கும் போது காலை 3.30 மணியளவில் எழுந்து படிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த முறை என் உடலுக்கு பழவிட்டது. கல்லூரி முடிந்து நான் வீடில் ஓய்வில் இருந்தாலும் சீக்கிரம் எழுந்துவிடுவேன். நானே தூங்க முயற்சித்தாலும் என்னால் தூங்க முடியாது. அதனால் தினமும் 4 மணிக்கு எழுந்து என் தினசரி வேலைகளை செய்ய துவங்கிவிடுவேன். அதேபோல், பல திரைப்படங்கள் இரவு முழுவதும் படமாக்கப்படுகின்றன, ஆனால் என்னால் 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது.
என்னுடைய இந்த பழக்கத்தை பார்த்து, இயக்குநர்கள் ஒரு சிறு பிள்ளையாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள். காரணம் அடம் பிடித்தாவது 9 மணிக்கு தூங்கிவிடுவேன் என்பதால் இரவு நேர ஷூட்டிங்கில் எனக்கு பிரச்சனையாக இருந்தாலும் இதை ஒரு நல்ல பழக்கமாகவே நான் பார்க்கிறேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.