சிவகார்த்திகேயன் ஓகே!! விஜய், அஜித் வேண்டவே வேண்டாம்-ன்னு ஒதுக்கிய நடிகை சாய் பல்லவி
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் தெலுங்கு, தமிழ் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி பிஸியான நடிகையாகினார்.

அவருடன் நடிக்க வேண்டும் என்று சில நடிகர்கள் கூட போட்டி வரும் நிலையில் அஜித், விஜய் படங்களை வேண்டவே வேண்டாம் என்று தூக்கி எறிந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
ஒரு மேடையில் விஜய்யுடன் நடிக்க ஆசை என்று கூறிவிட்டு விஜய் பட வாய்ப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து அவமானப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி.
முக்கியமான ஒரு படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், துணிவு படத்தில் அஜித்துடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதற்கு சாய்பல்லவி, பெரிய நடிகர்களின் படத்தில் நடித்தால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என்றும் அரைகுறை ஆடையணிந்து பாட்டுக்கு ஆடச்சொல்வார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இதை கேட்ட அஜித், விஜய் ரசிகர்கள் சாய்பல்லவியை கிண்டல் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் சாய்பல்லவி முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.