ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் முன் மாஸ் காட்டிய சாய் பல்லவி.. அரங்கத்தை அதிரவைத்த வீடியோ
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்தியளவில் பிரபலமாகிவிட்டார் சாய் பல்லவி. கடந்த ஆண்டு அமரன் படத்தின் மாபெரும் வெற்றி இவருடைய மார்க்கெட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டது.
முன்னணி ஹீரோக்களுக்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு, ஒவ்வொரு மேடையிலும் தற்போது சாய் பல்லவிக்கு கிடைத்து வருகிறது. ஒரு முறை படத்தின் ப்ரோமோஷன் விழாவில், சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சுரேஷ் மூவரும் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குநர் சுகுமார் முதலில் ராஷ்மிகா பெயரை சொல்லி அவரை பற்றி பேசினார். ரசிகர்கள் கோஷம் ஓரளவு இருந்தது. பின் கீர்த்தி சுரேஷ் பெயரை சொல்லி பேசும்போது அதே அளவுக்கு கோஷம் ரசிகர்களிடையே எழுந்தது.
ஆனால், சாய் பல்லவியின் பெயரை சொல்லி முடித்துவிட்டு அவரை பற்றி பேசமுடியாமல் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டார் இயக்குநர் சுகுமார். காரணம், ரசிகர்களின் அளவுகடந்த அன்பின் கோஷத்தில் அவரால் பேசவே முடியவில்லை.
அப்போது அவர் சாய் பல்லவியை பார்த்து, 'நீங்க தான் லேடி பவன் கல்யாண்' என கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Sai Pallavi 👌👏
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 13, 2025
Lady PawanKalyan of Tollowood!
pic.twitter.com/7UEtCMVTxz