இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா நடிகை சாய் பல்லவி.. எவ்வளவு தெரியுமா, இதோ
நடிகை சாய் பல்லவி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர். இவர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த அமரன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள சாய் பல்லவி ராமாயணா மற்றும் Ek Din ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய சினிமாவில் கலைகொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 47 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.