காசுக்காக சாய் பல்லவியிடம் அப்படி நடந்துகொண்ட தயாரிப்பாளர்.. தெறித்து ஓடிய நடிகை
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இப்படத்திற்கு பிறகு மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி கொரோனா தாக்கத்திற்கு முன் தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்திற்காக சாய் பல்லவிக்கு இரண்டு மடங்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட ரூ. 4.5 கோடிக்கு மேல்.
கொரோனா தாக்கத்திற்கு பின் சினிமா துறை மிகவும் பின்தங்கியுள்ளகாரணத்தினால், பல நடிகர், நடிகைகளும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். இதனால் சாய்பல்லவிடம் அந்த தயாரிப்பாளர் நீங்களும் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என கட்டயப்படுத்தி கேட்டுள்ளார்.
ஆனால் சாய் பல்லவி சம்பளத்தை குறைக்க மறுப்பு தெரிவித்து அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். இதனால் அந்த படக்குழுவும், தயாரிப்பாளரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.