சாய் பல்லவி வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இப்போது இத்தனை கோடி வாங்குகிறாரா
நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள சாய் பல்லவி, ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் ராமாயணா படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், முதல் படத்திற்கும் தற்போது ராமாயணா திரைப்படத்திலும் நடிக்க சாய் பல்லவி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரேமம் படத்தில் நடிக்க சாய் பல்லவி ரூ. 10 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
மேலும் தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.