சந்தோஷமான விஷயத்தை சொல்ல நினைத்தேன் ஆனால் அதுக்குள்ள..ரகசிய திருமணம் பற்றி பேசிய சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் சிவகார்த்திகேயனின் 21 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
இப்படத்தின் பூஜையின் போது சாய் பல்லவியும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் அடுத்தடுத்து நிற்கும் புகைப்படங்களை கிராப் செய்து, சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
மீண்டும் மீண்டும் நெல்சன் உடன் வெளிநாட்டில் ஊர் சூற்றும் பிரியங்கா மோகன்..காட்டு தீ போல் பரவும் செய்தி
இந்நிலையில் இது குறித்து பேசிய சாய் பல்லவி, என்னை பற்றிய வதந்திகள் வந்தால் கூட பொறுத்துக்கொள்வேன். அதை பற்றி பேச மாட்டேன். ஆனால் குடும்பம் போல் இருக்கும் நண்பர்களை பற்றி தவறான செய்தி வந்தால் நான் பதிலடி கொடுப்பேன்.
என்னுடைய படத்தின் பூஜா சமயத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை கிராப் செய்து காசுக்காகவும் அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர்.
என் அடுத்தடுத்த திரைப்படம் பற்றி மகிழ்ச்சியான தகவல்களை சொல்லலாம் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படியான செயலால் எனக்கு வேதனை அளிக்கிறது என்று சாய் பல்லவி விளக்கம் கொடுத்துள்ளார்.