சாய்னாவை இரட்டை அர்த்தத்தில் அசிங்கப்படுத்திய நடிகர்! கோபத்தின் உச்சத்தில் தந்தை..

Siddharth SainaNehwal
By Edward Jan 11, 2022 03:10 PM GMT
Edward

Edward

Report

கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது சில நெருக்கடிகளை சந்தித்தார். இதனை கண்டித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் சித்தார்த் ஆபாச வார்த்தையை கொண்டு கருத்துக்களை கூறி சாய்னாவை அசிங்கப்படுத்தியுள்ளார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்த நிலையில் சாய்னாவின் தந்தை கடுமையாக சாடி பேசியுள்ளார். என் மகள் பல பதக்கங்களை இந்தியாவிற்காக பெற்றுள்ளார்.

சித்தார்த் என்ன செய்தார். நடிக்க மட்டுமே அவரது வேலையாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் சாய்னாவின் கணவர், எனக்கு அவமானமாகவுள்ளது. நீங்கள் இப்படியான மோசமான வார்த்தையை பயன்படுத்தி இருக்க தேவையில்லை.

நாகரீகமான வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தியிருக்கலாம். இதெல்லாம் நல்லது கிடையாது என்று கூறியுள்ளார். இதற்கு சித்தார்த் நான் கூறிய வார்த்தையின் அர்த்தம் வேறு. தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று பதிலளித்துள்ளார்.