அந்த சூழ்நிலையை மகளுக்கு கொடுக்கக்கூடாது..இல்லை என்றால் பிரச்சனைதான்!! பாடகி சைந்தவி ஓபன் டாக்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து தேசிய விருதுகளை பெற்றவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். கடந்த 2013ல் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜிவி, ஒரு மகளை பெற்றெடுத்தார்.

மகள் பிறந்த சில வருடங்களில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்றாலும் மகளுக்காக இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஜிவியின் இசைக் கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடுவதுமாக இருந்து வரும் நிலையில், தன்னுடைய மகள் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார் சைந்தவி.
பிரச்சனை வரும்
அதில், என் மகள் என் வீட்டிலும் இருப்பாள், அவங்க அப்பா வீட்டிலும் இருப்பாள். அவள் என் வீட்டில் இருந்து அங்கே செல்வதற்கு முன்பு ஃபோன் செய்து, இங்கே என்ன செய்தால் என்பதை அவரிடம் சொல்லிவிடுவேன்.

அதேபோல் அங்கே ஏதாவது வால் தனம் செய்தால் அவர் உடனே எனக்கு ஃபோன் செய்து இப்படி செய்தால், நான் திட்டினேன் என்று சொல்லிவிடுவார். மகள் வீட்டுக்கு வந்ததும், அப்பா வீட்டில் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டால், அவள் உடனே, உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியத்தோடு கேட்பாள்.
நாங்கள் பேசிக்கொண்டு தான் இருப்போம், நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்றால் பிரச்சனை வரும். அந்த சூழ்நிலையை மகளுக்கு கொடுக்கக்கூடாது என்று நானும் அவரும் தெளிவாக இருக்கிறோம் என்று சைந்தவி, ஜிவியுடனான தொடர்பு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.