காதல் வேண்டாம் என்று விலகிய ஐஸ்வர்யா ராய்..கதவை தட்டி torture செய்த சல்மான் கான்
1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் தான் ஐஸ்வர்யா ராய்.
இவர் 1997 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்தார். இதன் பின் பல படங்களில் நடித்து இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக உயர்ந்தார்.
ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடித்து வந்த போது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு முன்பு நடிகர் சல்மான் கானை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

துன்புறுத்திய சல்மான் கான்
1999-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'சஞ்சய் லீலா பன்சாலி' என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார்.
அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்ததாம். ஆனால் இந்த காதல் சில வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணம் சல்மான் கானின் கோபம் தான் என்று கூறப்படுகிறது.
இவர்களின் காதல் உறவு முடிவுக்கு வந்த பிறகும், சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் செல்லும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பிரச்சனைகள் செய்தாராம்.
மேலும் ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கே சென்று அவர் உள்ளே அழைக்கும் வரையிலும் கதவை தட்டுவாராம். இவ்வாறு ஐஸ்வர்யா ராய் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.
