முன்னாள் கணவர் கொடுத்த 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம்.. தூக்கி எறிந்த முன்னணி நடிகை, யார் தெரியுமா
Samantha
Naga Chaitanya
By Kathick
சமந்தா இன்று இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள இவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின் 2021ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்துக்கு பின் சமந்தாவின் முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யா ரூ. 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ரூ. 200 கோடி ஜீவனாம்சத்தை நடிகை சமந்தா வாங்கவில்லை, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என்றும், நான் உழைத்து சாம்பாதித்து கொள்வேன் என்றும் சமந்தா இந்த ஜீவனாம்சத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.