இந்த விசயத்தில் சமந்தாவிடம் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே தோத்துட்டாங்களே.. அடுத்த தென்னிந்திய லேடி சூப்பர்!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகந்து வரும் நடிகை சமந்தா புஷ்பா படத்திற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட்டை எகிறவைத்து வருகிறார். தி பேமிலி மேன் 2 படத்தின் சர்ச்சைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
நயன்தாரா
இப்பாடலுக்காக சுமார் 5 கோடி அளவில் சம்பளம் பெற்றார். இதன்மூலம் ஒரு படத்திற்கான சம்பளம் 5 கோடி என்று அப்படியே உயர்த்திவிட்டார். இதன்பின் போட்டோஷூட் பக்கம் சென்றும் பொது இடத்தில் கிளாமர் ஆடை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தார். அப்படி மோஸ்ட் பாப்புலர் நடிகைகள் லிஸ்ட்டில் தமிழில் முதல் இடத்தில் நடிகை சமந்தா இருந்து வந்தார். தமிழில் கூட நயன் தாராவை பின்னுக்கு தள்ளி கடந்த பல மாதங்களாக சமந்தா இரண்டாம் இடத்தில் இருந்தார்.

மோஸ்ட் பாப்புலர் நடிகைகள் லிஸ்ட்
இந்நிலையில் தற்போது நயன் தாரா தன்னுடைய திருமணம், ஜவான் படம், ஹனிமூன் என்று இருந்ததால் மோஸ்ட் பாப்புலர் தமிழ் செப்டம்பர் மாதத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து நடிகை சமந்தாவுள்ளார். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகைகளாக பூஜா ஹெக்டே, தமன்னா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கிரித்தி செட்டி உள்ளிட்ட நடிகைகளை பின்னுக்கு தள்ளி தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் பாப்புலர் நடிகைகள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் உள்ளார்.
என்னதான் காஜல் அகர்வால், அனுஷ்கா சர்மா தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தால் கூட இரண்டாம் மூன்றாம் இடத்தினை பிடித்து சமந்தாவிடம் தோற்றுள்ளனர். இதன்மூலம் நடிகை சமந்தாவின் மார்க்கெட் தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.