நயன்தாரா, த்ரிஷா இல்லை.. சமந்தா தேர்ந்தெடுத்த சிறந்த ஹீரோயின்கள் இவர்களா?
சமந்தா
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலமாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. சினிமாவில் சாதித்த இவர் தொடர்ந்து நிறைய தொழில்களையும் கவனித்து வருகிறார்.
சமந்தா சமீப காலமாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து உள்ளார்.
கடைசியாக சமந்தா நடிப்பில் 'சிடாடல் ஹனி பன்னி' என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லிஸ்ட் இதோ
இன்ஸ்டாகிராம் தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அதில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கவும் செய்வார். தற்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தா, 'உள்ளொழுக்கு படத்தில் நடித்த பார்வதி, சூக்சமதர்ஷினியில் நடித்த நஸ்ரியா, அமரன் படத்தில் நடித்த சாய்பல்லவி, ஜிக்ரா படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல் படத்தில் நடித்த அனன்யா பாண்டே' ஆகியோரின் நடிப்பு என்னை கவர்ந்தது" என்று பதிலளித்துள்ளார்.