தமன்னாவுடன் காதலா? எச்சரித்த மனைவி.. கார்த்தி உடைத்த ரகசியம்
கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர்.
கார்த்தி காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று படம் என தனது திரைப்பயணத்தில் நிறைய வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படத்தை முடித்த கையோடு சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நடித்தால் அவர்கள் குறித்து வதந்திகள் இணையத்தில் பரவ தொடங்கிவிடும். அந்த வகையில், கார்த்தி மற்றும் நடிகை தமன்னா இடையே ஏதோ இருப்பதாக வதந்திகள் வந்தன.
ரகசியம்
தற்போது இது குறித்து கார்த்தி பதிலளித்துள்ளார். அதில், "நான் அந்த வதந்திகளை நன்றாக அனுபவித்தேன். ஏனனில், அதில் கண்டிப்பாக உண்மை இருக்க போவதில்லை.
அதனால் என்னை குறித்து பரவும் வதந்திகளை ஜாலியாக எடுத்துக் கொண்டேன். தன் கணவர் மீது பெண்களுக்கு கிரேஸ் இருந்தால் பொதுவாக மனைவிகளுக்கு பிடிக்காது.
அது போன்று தான் என் மனைவி ஒரு நாள், நீங்கள் கதாநாயகிகளைத் தொடாமல் நடிக்க முடியாதா? என்று கேட்டார். ஆனால் இவை அனைத்தும் சினிமாவில் இயல்பு தான்" என்று கூறியுள்ளார்.