40 ஆண்டுக்கு முன் நீச்சல் ஆடையில் திணறடித்தவர்!! அமெரிக்காவில் செட்டிலாகி நடிகை..
நடிகை ஜெயஸ்ரீ
80 காலக்கட்டத்தில் அனைவரும் அறிந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஜெயஸ்ரீ. பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ் ஜெயலட்சுமியின் பேத்தியான ஜெயஸ்ரீ, திரைத்துறை புதிது கிடையாது. ஜெயஸ்ரீயின் தாத்தாக்கள் எஸ் ராஜம், எஸ் பாலசந்தர் இருவருமே இசையமைப்பாளர்கள் தான்.

1985ல் வெளியான தென்றலே என்னைத்தொடு என்ற படத்தின் மூலம் ஜெயஸ்ரீ அறிமுகமாகினார். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் மோகன் ஹீரோவாக நடித்த இப்படம் மிகப்பெரியளவில் ஹிட் கொடுத்தது.
இப்படத்தின் மிகமுக்கிய வெற்றிக்கு வித்திட்டது இளையராஜாவின் பாடல்களும் இசையும் தான். ’புதிய பூவிது பூத்தது என்ற பாடலில் ஜெயஸ்ரீ நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரின் இந்த லுக்கை பார்க்கவே ரசிகர்கள் படத்தினை பார்க்க வந்ததாகவும் கூறினர்.
அதேபோல், மற்றொரு பாடலான தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற பாடல் இன்றுவரை பலரது விருப்பமான பாடலாகவும் இருக்கிறது.

இப்படத்திற்கு பின் பிஸியான நடிகையாக வலம் வந்த ஜெயஸ்ரீ, பிஸ்தா, காதல் 2 கல்யாணம், மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்தவர் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
