8 மாசத்துக்கு பின் முகத்தில் சிரிப்பு!! மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் பழையபடி மாறிய நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு சுதந்திர பறவையாக சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இடையில் கிளாமர் லுக் ஜிம் ஒர்க்கவுட் என்று தன்னைத்தானே செதுக்கி வந்தார் சமந்தா. இதற்கிடையில் 8 மாதங்கள் தான் சில பிரச்சனைகளில் இருப்பதாக அதற்காக உடற்பயிற்சி செய்து வருவதாக மறைமுகமாக கூறியிருந்தார்.

அதன்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நடிக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்ததாக உருக்கமாக பேட்டிகளில் கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
மயோசிடிஸில் இருந்து மீண்டு வர அதற்காக வெளிநாடு மற்றும் ஹைதராபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உருக்கமான பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். யசோதா, சாகுந்தலம், குஷி, பாலிவுட் வெப் தொடர் என்று பிஸியான ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது சிகிச்சைக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் உடல் எடையை குறைத்தபடியும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது சிரித்தபடி செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தார்.

