கணவரை பிரிந்தும் மச்சினன்-ஐ விட்டு கொடுக்காத நடிகை சமந்தா!! பாராட்டும் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் இயக்குனர்கள் படங்களில் கமிட்டாகி வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு 5 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராகினார் சமந்தா.
இடையில் விவாகரத்து பிரச்சனையை தாண்டி சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.
இதுகுறித்து அவரே, படுத்த படுக்கையில் இருந்து எழுந்து நிற்கக்கூட கஷ்டப்பட்டதாகவும் அதிலிருந்து மீண்டு வருவேன் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறியிருந்தார். அதற்காக கடினமான உடற்பயிற்சி சிகிச்சை மேற்கொண்டு வந்த சமந்தா 8 மாதங்களுக்கு பின் குணமடைந்து தன்னுடைய பழைய ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் கணவர் நாக சைதன்யாவை சமந்தா பிரிந்தாலும் அவருடன் முன்னாள் மச்சினரும், நண்பருமான அகில் அக்கினேனியின் ஏஜெண்ட் என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகியது.
அந்த வீடியோவை பகிர்ந்த அகிலுக்கு நடிகை சமந்தா, பீஸ்ட் மூட் ஆன் என்று கூறி ஒரு மெசேஜ் போட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்ததோடு சமந்தா குணமடைய வேண்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.