மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் புதுவீடு வாங்கிய சமந்தா!! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியாம்..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து பாணாகாத்தாடி படத்தில் தமிழில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் சமந்தா.
இதனைதொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து அவரை காதலிக்க ஆரம்பித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சமந்தா, கிளாமரில் குறை வைக்காமல் நடித்து வருகிறார். இதற்கிடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் படங்களில் நடித்தும் வந்துள்ளார். பின் மயோசிடிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று யசோதா, சாகுந்தலம், குஷி, சிடாடல் போன்ற படங்களிலும் நடித்து வந்தார்.
விவாகரத்துக்கு பின் அம்மாவுடன் வசித்து வரும் சமந்தா, தற்போது சாகுந்தலம் படத்திற்கு பின் ஹைதராபாத்தில் 3 படுக்கையறை கொண்ட டூப்ளெக்ஸ் அபார்ட்மெண்ட் ஒன்றினை சுமார் 8 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார்.
ஏற்கனவே மும்பையில் 15 கோடிக்கு ஒரு வீடு வாங்கியிருந்தார் சமந்தா. மேலும் தற்போது ஒரு படத்திற்காக 4 கோடியில் இருந்து 5 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடியாக உயர்ந்துள்ளது.