மும்பையில் செட்டிலாக போகிறாரா நடிகை சமந்தா.. கோடிக்கணக்கில் செலவு
Samantha
By Kathick
நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பழையபடி தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் பல படங்களை கமிட் செய்துள்ளார்.
சமீபத்தில் கூட வெப் சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் சமந்தா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், பல பாலிவுட்டில் பிஸியாகியுள்ள சமந்தா, ஹைதராபாத்தில் இருந்து ஒவ்வொரு முறையில் படப்பிடிப்பிற்கு மும்பை செல்லமுடியாத காரணத்தினால் மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளாராம்.
இந்த வீட்டின் விலை மட்டுமே ரூ. 15 கோடி ஆகும் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பல நெட்டிசன்கள் ஒரு வேலை சமந்தா மும்பையிலேயே செட்டில் ஆக முடிவு செய்துவிட்டாரோ என்று கிசுகிசுத்து வருகின்றனர்.