கணவருடன் தொடர்பில் இருந்த மேனேஜர்! கேள்விப்பட்டு வேலைவிட்டு தூக்கிய சமந்தா..

samantha nagachaitanya tamilactress
By Edward Apr 06, 2022 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா 2010ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் அப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடிப்போட்டு கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சமந்தா விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு தமிழில் ஒரு படத்தில் கூட கமிட்டாகவில்லை.

கடந்த ஆண்டு காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தப்பின் படுமோசமான காட்சிகளிலும் குத்தாட்டம் போட்டும் க்ளாமர் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மும்பையில் சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்றினை வாங்கியிருக்கிறார் சமந்தா.

அப்படி இருக்கும் சமந்தா நாக சைதன்யாவுடன் நடித்த Majili படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ளார். கணவருடன் அப்படத்தில் நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படமும் அதில் இருந்துள்ளதை சமந்தாவை கிண்டல்செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில் பாலிவுட், டோலிவுட் என பிஸியாக இருக்கவிருக்கும் சமந்தா அதற்காக புது மேனேஜர் ஒருவரை நியமித்துள்ளாராம். ஆரம்பத்தில் இருந்தே தனக்கும் நாக சைதன்யாவுக்கும் மகேந்திரா என்பவர் மேனேஜராக இருந்துள்ளார்.

நாக சைதன்யாவை பிரிந்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்து பணிகளை பார்த்து வந்ததால் சமந்தா அவரை தூக்கிவிட்டு வேறொருவரை நியமித்திருக்கிறார்.