நயன்தாராவை அசிங்கப்படுத்திய இயக்குனர்? பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..

Nayanthara Samantha Alia Bhatt Indian Actress
By Edward Jul 22, 2022 09:04 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் குஷி, சகுந்தலம், யசோதா போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் கரண் ஜோகர் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சமந்தா.

அதனால் கரண் ஜோகர், காஃபி வித் கரண் சீசன் 2 நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டில் நடிகை சமந்தா நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனிப்பட்ட விசயங்கள் பற்றியும், படங்களை பற்றியும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சமந்தா.

அப்போது, ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் பட்டியலில் சமந்தா முதல் இடத்தில் வந்ததற்கு காசு கொடுத்து வாங்கினேன் என்று கூறியிருந்தார். மேலும், சமீபத்தில் நடித்த ஒரு படத்தில் நயன்தாராவுடன் நடித்திருக்கிறேன். மிகச்சிறந்த நடிகை என்று கூறியுள்ளார்.

அதற்கு கரண், என்னுடைய லிஸ்ட்டில்(ஆர்மேக்ஸ்) அவர் இல்லை என்று நடிகை நயன்தாராவை அசிங்கப்படுத்தும் விதமாக கூறியுள்ளார். அதற்கு சமந்தா, அதனால் தான் நாங்கள் காசு கொடுத்தோம் அந்த பட்டியலுக்கு என்று கூறினார்.

அதன்பின் அவருடன் நடித்து முடித்த கடைசி நாளில் கூட இருவரும் கட்டியணைத்து அழுதோம் என்று கூறி நயன்தாராவை பெருமைப்படுத்தி பேசியுள்ளார்.

இதற்கு ஒருவர் சமந்தாவுக்கும், நயன்தாராவுக்கு உள்ள அன்பான தொடர்பு. உங்களில் லிஸ்ட்டில் நயன் தாரா வராததற்கு காரணம் நீங்கள் வாரிசு பிராடெக்ட்களுக்காக வாக்குவாதமும் விவாதங்களையும் செய்பவர் என்று கிண்டலடித்து கருத்தினை கூறியுள்ளார்.