சமந்தாவையும் விட்டுச்வைக்காத அரபிக் குத்து! 2 நிமிஷத்தில் இத்தனை லட்சமா?
samantha
anirudh
tamilactress
beast
arabickuthu
By Jai
நடிகர் விஜய் நடித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் பீஸ்ட். அனிரூத் இசையில் இப்படத்தின் அரபிக் குத்து பாடல் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியாகி தற்போது வரை 40 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இப்பாடலை மேலும் இப்பாடலுக்கு சினிமா நட்சத்திரங்கள் உட்பட விஜய் ரசிகர்கள் பலர் ரீல்ஸ் செய்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலர் ஹார்ட்டுகளை வெளியிட்டு வருகிறார்கள். 10 நிமிடத்தில் இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. விஜய் பாட்டுனா சும்மாவா விடுவாங்க.