ரசிகர்களை மயக்கும் உடையில் சமந்தா.. விவாகரத்து பிறகு ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்

samantha allu arjun pushpa sizzling song
By Kathick Dec 08, 2021 03:40 PM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் இது தான் இருக்கும் என்று கூறி, பல விதமாக சர்ச்சைகள் இணையத்தில் எழுந்தன.

ஆனால் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்தார் சமந்தா. விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வரும் வழியாக, படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவருடைய கைவசம், காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்மின்றி, கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்படும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

விரைவில் இப்படங்கள் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதுமட்டுமின்றி தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் சமந்தா. இந்த பாடலில் நடனமாடுவதற்கு ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்நிலையில் சமந்தாவின் புகைப்படத்துடன் இந்த பாடலின் லிரிகள் வீடியோ வரும் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

ரசிகர்களை மயக்கும் உடையில் சமந்தா.. விவாகரத்து பிறகு ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் | Samantha Dancing For Single Song