விஜய் சூரியானா ஓகே! 11 வருடங்களாக அஜித்தை ஒதுக்கி வைக்கும் நடிகை சமந்தா..

vijay samantha valimai ajithkumar pushpa beast ak61
By Edward Jan 11, 2022 04:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி பின் பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்தார்.

நடிகர் விஜய்யின் ராசியான நடிகையாக திரிஷா, காஜல் அகர்வாலுக்கு அடுத்து சமந்தா தான் இருக்கிறார். அப்படியிருக்கும் சமந்தா இன்னும் நடிகர் அஜித்தின் ஒரு படத்தில் கூட ஜோடிப்போட்டு நடிக்கவில்லை.

இதற்கு காரனம் அஜித்தின் கதைக்கு ஏற்ப சமந்தாவால் நடிக்க முடியாதா இல்லை வாய்ப்பு கிடைக்கவில்லையா? என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அஜித் AK61 அல்லது அதையடுத்து வரும் படத்திலாவது நடிப்பாரா என்று பார்ப்போம்.