சமந்தா கள்ளத்தொடர்பில் இருக்கிறார் என இதை வைத்து தான் சொன்னேன்: அச்சத்தில் டாக்டர் அடித்த பல்டி

samantha
By Tony Oct 26, 2021 11:35 AM GMT
Report

நடிகை சமந்தாவின் விவாகரத்து அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தது ஏன் என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் சமுக வலைதளங்களில் பேசினார்கள்.

டைவர்ஸுக்கு என்ன காரணம் என சமந்தா, நாக சைதன்யா இருவருமே வாய்திறக்கவில்லை.

அதனால் பல்வேறு வதந்திகள் அது பற்றி உலா வந்தது. குறிப்பாக பிரபல மருத்துவர் சிஎல் வெங்கட் ராவ் சமந்தாவுக்கு பல கள்ள தொடர்புகள் இருந்தது என பேசியது பெரிய சர்ச்சையானது. 

அவர் மீதும், இரண்டு youtube சேனல்கள் மீதும் சமந்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சமந்தா பற்றி அப்படி பேசியது ஏன் என விளக்கம் கொடுத்து இருக்கிறார் டாக்டர் வெங்கட் ராவ்.

சமந்தா எனக்கு பேத்தி போன்றவர், அவர் பற்றி சமூக வலைத்தளங்களில் வந்த செய்தியை வைத்து தான் நான் அவர் கள்ளத்தொடர்பில் இருந்தது தான் டைவர்ஸுக்கு காரணம் என பேசினேன் என கூறியுள்ளார். 

சமந்தா வழக்கு போட்ட பிறகு இப்படி பல்டி அடித்து இருக்கிறார் அந்த டாக்டர்.