பல கோடி நஷ்டத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!! கதாநாயகன் சம்பளத்தால் புலம்பும் சமந்தா..

Samantha Shaakuntalam
By Edward Apr 25, 2023 06:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, பல ஆண்டுகள் கழித்து பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகவுள்ள சிட்டாடல் படத்தின் இந்திய வெர்சனில் வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் சமந்தா.

இதற்கு முன் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்த சமந்தா யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சாகுந்தலம் படம் சுமார் 80 கோடி செலவில் உருவாகி வெளியானது.

படம் ரிலீஸாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு தயாரிப்பாளர் தலையில் துண்டை போடும் அளவிற்கு பல கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுத்த செலவில் டெக்னிக்கலாக பல விதத்தின் தயாரிப்பாளர் செலவு செய்திருந்தால் படம் ஓரளவிற்கு லாபத்தை கொடுத்திருக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.

அதுவும் கதாநாயகனாக நடித்த தேவ் மோகனுக்கு மட்டும் சம்பளமாக 1.75 கோடியாக கொடுக்கப்படிருக்கிறதாம். இப்படியான மொக்கையான படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் இதில் கவனம் செலுத்தாமல் சொதப்பிவிட்டதாக மோசமாக நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்த படத்தின் தோல்வியாக மிகப்பெரிய அடியை வாங்கியதோடு மன உளைச்சலில் சமந்தா இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மெனக்கெட்டு இதற்காக சமந்தா பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கஷ்டப்பட்டது தான் மிச்சம் என்று கலாய்த்தும் வருகிறார்கள்.