மறைமுகமாக இயக்குநரை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா.. எங்கு தெரியுமா?

Samantha Tamil Cinema Marriage Actress
By Bhavya Dec 01, 2025 07:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.

நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான். இவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோ, வீடியோ எல்லாம் அவ்வப்போது வெளியாகி வருவதை நாம் அறிவோம்.

மறைமுகமாக இயக்குநரை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா.. எங்கு தெரியுமா? | Samantha Got Married Details Goes Viral

எங்கு தெரியுமா?

இந்நிலையில், இன்று காலை சமந்தா - ராஜ் நிடிமுரு திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை Flimfare தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தகவல் குறித்து சமந்தா வாய்திறக்காமல் இருக்கிறார்.