நயன்தாராவின் இரட்டை வேடம்..சம்பளம் வாங்கிட்டு இப்படி சொன்னால் எப்படி!! திருப்பூர் சுப்ரமணியம்..

Ajith Kumar Nayanthara Gossip Today Tirupur Subramaniam
By Jai Aug 22, 2026 10:00 AM GMT
Report

நயன்தாரா

நடிகை நயன்தாரா நடிப்பில் Hi, டாக்ஸிக் படங்கள் இந்த மாதம் ரிலீஸாகவுள்ள நிலையில், இரு படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். பெரும்பாலும் பட விழாக்களிலும், பிரமோஷன்களிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, தான் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் செய்வது பலரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

நயன்தாராவின் இரட்டை வேடம்..சம்பளம் வாங்கிட்டு இப்படி சொன்னால் எப்படி!! திருப்பூர் சுப்ரமணியம்.. | Tirupur Subramaniam Troll Nayanthara Promotions

இந்நிலையில், நயன்தாராவின் இந்த செயல்பாடு குறித்து திரையங்க உரிமையாளர் சங்க தலைவரும் திருப்பூர் திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் சுப்ரமணியம்

அதில், நயன்தாரா தன்னுடைய கணவர் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், ஆனால் மற்ற தயாரிப்பு பட்ங்களின் விழாக்களுக்கு வர மறுக்கிறார், அது ஏன்? ஒரு படத்தில் சம்பளம் வாங்கிவிட்டோம், பிரமோஷனுக்கு வரமாட்டோம் என்று சொல்வது எப்படி நியாயமாகும். இரட்டை வேடம் போடுவது சரியா? தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும், சூழ்நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நயன்தாராவின் இரட்டை வேடம்..சம்பளம் வாங்கிட்டு இப்படி சொன்னால் எப்படி!! திருப்பூர் சுப்ரமணியம்.. | Tirupur Subramaniam Troll Nayanthara Promotions

அஜித்தும் நயன்தாராவும் ஆரம்பகாலத்தில் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தான், ஆனால் வளர்ந்தப்பின் வரமாட்டோம் என்று சொல்வது ஏன்? நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்றால், உங்களை நம்பி கோடிக்கோடியாக முதலீடு செய்யும் தயாரிப்பாளரும் வளரவேண்டும் அல்லவா? ஒரு படம் வெற்றிப்பெற நடிகர்கள் விளம்பரத்தில் கலந்துகொள்வது முக்கியமானது.

திரைப்படம் என்பது ஒரு தனிநபரின் உழைப்பால் மட்டும் உருவானதல்ல, தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகள் எனப் பலரின் உழைப்பில் உருவாவது. அப்படி இருக்கும்போது மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றிப்பெற செய்வதில் பிரமோஷனுக்கும் முக்கிய பங்குள்ளது என்று திருப்பூர் சுப்ரமணியம் காட்டமாக கூறியிருக்கிறார்.