விவாகரத்துக்கு பின் ஜம்முன்னு வாழ்க்கை! ஒரேஒரு குத்தாட்டம் கோடியில் புறளும் சமந்தா..

samantha salary pushpa alluarjun rashmikamandanna
By Jai Nov 19, 2021 07:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. 4 வருட காதல் திருமணத்திற்கு பிறகு சர்ச்சை படங்களால் எழுந்த கிசுகிசுக்களால் உண்மையாகவே இருவரும் விவாகரத்தை உறுதி செய்தி பிரிந்தனர்.

அதன்பின் அவர் பக்கம் செல்லாம ஊர் ஊராய் தோழிகளுடன் சுற்றி பார்ட்டியிலும் கலந்து கொண்டு ஜாலியாக இருந்து வருகிறார். விவாகரத்து பிறகு சம்பளத்தை உயர்த்திய சமந்தா பாலிவுட் படங்களில் எப்படி வேண்டுமேனாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் , ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட கமிட்டாகியுள்ளார்.

இதுதான் அவர் வாழ்க்கையில் முதலாவதாக திருமணத்திற்கு பின் போடும் குத்தாட்டம். இப்பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தா சுமார் 1.5 கோடியளவில் சம்பளத்தை கேட்டுள்ளார் என்று ஹைதராபாத் செய்தி வட்டாரம் கூறி வருகிறது.

கதாநாயகியாகவே 4 கோடி சம்பளம் வாங்கி வந்த சமந்தா இப்படத்தில் ஒரேஒரு பாடலுக்கு சம்பளத்தை இப்படி வாங்கியது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எப்படியிருந்தால் என்ன சமந்தாவின் மார்க்கெட் அப்படியே தான் இருக்கிறது.