அந்த பழக்கம் என் கணவர் கத்து கொடுத்தது! இப்படியும் சொன்னியே சம்மு..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, மகேஷ் பாபு, ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டார்.
தான் அறிமுகமாகிய வின்னைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் படத்தில் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு அறிமுகமாகினார். அறிமுகமான நடிகருடனே காதலில் விழுந்து நாக சைதன்யாவை 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
4 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்தியை அறிவித்து ஷாக் கொடுத்தனர். பல இடங்களில் கணவர் புராணம் பாடிய சமந்தாவா இப்படியொரு முடிவை எடுத்தார் என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர்.
இதற்கு காரணம் பலவிதமாக கூறி வந்த நிலையில் நடிகை சமந்தா சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் பேசி வந்தார். பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஜிம் ஒர்க்கவுட் பழக்கத்தை யாரிடம் இருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு நாக சைதன்யாவின் பிட்னஸை பார்த்து தான் கற்றுக்கொண்டே. அவரை பார்க்கத்தான் ஜிம்மிற்கே செல்வேன் என்று கூறியுள்ளார். தற்போது தன் வீட்டிலேயே ஜிம்மை வைத்துக்கொண்டு ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு வருகிறார் சமந்தா.