மாயோசிடிஸ் சிகிக்சைக்கு பின் இப்படியொரு மாற்றம்.. நடிகை சமந்தாவின் மறுமுகம் இதுதான்
Samantha
By Edward
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகரளுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியாகவும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
இதன் பின் மாயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, ஆன்மீகத்தில் கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.