சமந்தா-நாக சைதன்யா சேர இயக்குனர் போடும் புதிய பிளான்! அடம் பிடிக்கும் சம்மு..

samantha nagachaitanya tamilactress oobaby nandinireddy
By Edward Apr 05, 2022 01:54 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு பிரிந்தார். இருவரும் இனியும் சேர்ந்தால் பல பிரச்சனை வரும் என்பதற்காக சமந்தா மாமனார் வீட்டில் வாங்கிய புடவை உட்பட பலவற்றை திருப்பி தந்துள்ளார்.

விவாகரத்துக்கு பிறகு இருவரும் தங்களின் சினிமா பாதைகளில் மும்முரமாக கவனம் செலுத்தியும் வருகிறார்கள். தமிழில் நடிகை சமந்தா தற்போதைக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு, பாலிவுட் என பிஸியான கால்ஷீட்டில் இருக்கிறார்.

அதேபோல் நாக சைதன்யாவும் தன் பங்கிற்கு பல படங்களை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெறுவதற்கு முன் ஓ பேபி படம் இயக்கிய நந்தினி ரெட்டியின் அடுத்த படத்தில் தான் அவர்கள் ஜோடியாக மீண்டும் நடிக்க இருந்தனர்.

இருவரும் கதையை கேட்டு ஓகே என்றும் கூறியுள்ளனர். தற்போது விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் சூழலில் அது முடியவே முடியாது என்று கூறி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இயக்குனரும் இருவருக்கேற்ற மாதிரியான கதையை வைத்திருப்பதால் அவர்களை எப்படியாவது இணைந்து நடிக்க வைக்க போராடியும் வருகிறாராம்.