படுத்த படுக்கையில் சிகிச்சை!! விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாவுக்கு ஆறுதலாக இருப்பவர்கள் யார் தெரியுமா!!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகை சமந்தா.

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா, 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 வருடம் கழித்து ஒருசில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சமந்தா தனக்கென ஒரு தனி ரூட்டினை எடுத்து கிளாமர் போட்டோஷூட் படங்கள் என்று பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்படியொரு கஷ்டத்தினையும் பாராத சமந்தா, யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வந்தார். வரும் பிப்ரவரி மாதம் சகுந்தலம் படம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் கடும் வலியுடன் நிகழ்ச்சியில் அழுதும் இருந்தார்.
இந்நிலையில் தனக்கு ஆறுதலாக தன்னுடைய செல்ல பிராணி நாய் ஹாஸ், சாஷா இருக்கிறார்கள் என்று சோஃபாவில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.