விவாகரத்து தான் என்னை இப்படி மாற்றிவிட்டது! தாராளம் காட்ட சமந்தா சொன்ன காரணம்?

Samantha Indian Actress
By Edward May 10, 2022 04:13 PM GMT
Report

சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது. விவாகரத்து பிறகு தங்களது சினிமா துறையில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சமந்தா தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆகிவிட்டார்.

ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தா, தொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விவாகரத்துக்குபின் போட்டோஷூட்டில் எல்லைமீறி வரும் சமந்தா, தற்போது பிரபல அட்டை படத்திற்கு எல்லைமீறி போஸ் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வாழ்க்கையில் நடைபெற்ற சில கசப்பான அனுபவங்கள் என்னை பக்குவம் அடைய செய்துள்ளது. இதனால் தான் நான் க்ளாமர் ரோலுக்கு தாவ காரணமாகியும் இருந்தது.

இனிமேல் ஆக்ஷன் காட்சிகளாகட்டும் க்ளாமர் காட்சிகளாகட்டும் கடினமாக இருந்தால் கூட அதை செய்வேன் என்று கூறீயுள்ளார். ஆனால் இதற்கு முன் நான் அப்படி இல்லை என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளார்.

விவாகரத்து ஒரு மனிதனை எப்படி பாடாய் படுத்தும் என்பதற்கு சமந்தா ஒரு உதாரணம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.