ஊ சொல்றியா மாமா, மறுமுறையெல்லாம் செய்யமாட்டேன்.. நடிகை சமந்தா அதிரடி
Samantha
Pushpa 2: The Rule
Actress
By Bhavya
சமந்தா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் சமந்தா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிரடி
அதில், " புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் தான் நான் ஒரு கவர்ச்சியான பெண் என்பது எனக்கு தெரிய வந்தது.
எனவே அந்த பாடலுக்கு நடனமாடுவதை நான் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். இது போன்ற பாடலுக்கு நான் கண்டிப்பாக மறுமுறையெல்லாம் நடனமாட மாட்டேன். அந்த பாடலுக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்" என்று தெரிவித்துள்ளார்.