விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவருடன் சேர்ந்துட்டாரா சாம்!! கோபத்தில் பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமந்தா. கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து அடுத்த 4 வருடம் கழித்து 2021ல் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார். இருவரும் அதன்பின் சந்தித்து பேசாமல் தங்கள் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
இப்படியிருக்கையில் மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தனியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் நடிகை சமந்தா தன்னுடைய நாய்க்குட்டி ஹாஷ்-யுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதே சமயம் நடிகர் நாக சைதன்யா, தன்னுடைய ஊழியரின் பைக்கை வாங்கி ஓட்டிப்பார்க்கும் வீடியோவை பகிர்ந்தார். நாக சைதன்யா வீடியோவில் ஹாஷ் நாய்க்குட்டியும் காணமுடிந்துள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டீர்களா? என்று சமந்தாவின் அந்த வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன்னை கேலி செய்வதை அறிந்த சமந்தா கோபத்துடன் உங்களுக்கு அறிவு இல்லையா வேலையில்லாமல் இருக்கீங்களா.. சும்மா இருந்தால் புத்தகத்தை தயவு செய்து படியுங்கள் அறிவாவது வளரும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
